search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் டிஎஸ்பி"

    பிரசாரத்தின்போது பிறரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சாதி, மத உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது என வேலூர் டிஎஸ்பி கூறியுள்ளார்.

    வேலூர்:

    அரசியல் கூட்டங்களை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக அனைத்து கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் காவலர் மன்றத்தில் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தெற்கு இன்ஸ்பெக்டர் அழகுராணி வரவேற்றார்.


    கூட்டத்தில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நகர் பகுதிகளில் டிஜிட்டல்பேனர் வைக்க அனுமதி கிடையாது. கிராமப்புறங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே சுவரொட்டி போன்றவை ஒட்ட வேண்டும். ஊர்வலம் செல்ல வேண்டுமானால் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்திலே கூட்டம் நடத்த வேண்டும்.

    பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் அதிகப்படியான மக்களை ஏற்றி வரக்கூடாது என கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே அதை கடைபிடிக்க வேண்டும். பிரசாரத்தின்போது பிறரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். சாதி, மத உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அந்த கட்சியினர் செய்யும் செலவுகள் கணக்கிடப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான பொருட்களை பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்களை நடத்த கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூரில் சுதந்திர தினத்தன்று தேசியகொடியை தலைகீழாக ஏற்றியது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வாணியம்பாடி டி.எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. போலீசார் தலைகீழாக தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

    இதனை பார்த்த பொதுமக்கள் தலைகீழாக பறந்த தேசிய கொடியை படம் பிடித்து வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பரவவிட்டனர். சில மணி நேரத்தில் இந்த படம் வைரலாக பரவியது. இதனையறிந்த போலீசார் தலைகீழாக பறந்த தேசிய கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக ஏற்றி வைத்தனர்.

    இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    தேசியகொடி தலைகீழாக ஏற்றியது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பர்வேஸ்குமார் வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    ×